சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் - நீதிமன்றம் கேள்வி

சிலிண்டர் விநியோகிக்கும் போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளிக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் - நீதிமன்றம் கேள்வி
x
சிலிண்டர் விநியோகிக்கும் போது,  டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிலளிக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படுவதாக கூறியுள்ளார் . இந்த நிலையில்,  வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள்,  20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம்  வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து புகார் அளித்தும், எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த  நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கூடுதலாக டெலிவரி கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினர். இது குறித்து நவம்பர் 1ம் தேதிக்குள் பதிலளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்