வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோப்பநாய் சிமி

தமிழக வனத்துறைக்கு முதன் முறையாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மோப்பநாய் சிமி மற்றும் அதன் பயிற்சியாளருக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பான பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
x
தமிழக காவல் துறையில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கவும், குற்றசெயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் மோப்பநாய் பிரிவு உள்ளது. இதேபோல் வனத்துறைக்கும் மோப்பநாய் பிரிவு உள்ள நிலையில் தமிழக வனத்துறைக்கு முதல் முறையாக மோப்பநாய் சிமி கொண்டு வரப்பட்டது. 

5 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த இந்த சிமி ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தது. இந்த மோப்பநாய் சிமிக்கு பயிற்சியாளராக பெரியசாமி உள்ளார். 

பயிற்சியாளர் கற்றுத் தரும் அத்தனை விஷயங்களையும் நுணுக்கமாக கற்றுக் கொண்ட சிமி, வனத்துறையின் செல்லப்பிள்ளையாகவே மாறியிருக்கிறது. 

வன பகுதிகளில் நக்சலைட் தடுப்பு, வெடிகுண்டுகளை கண்டெடுப்பது, வன வேட்டைக்கு வருவோரை அடையாளம் காண்பது என பன்திறமை பெற்று திகழ்கிறது. வனத்துறையிடம் உள்ள நாய்களில் தன் தனித்திறமையால் சிமி முதலிடத்தை பெற்று அசத்தியிருக்கிறது. 

சிமியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாகவும், பயிற்சியாளர் பெரியசாமியின் சேவையை பாராட்டியும் தமிழக அரசு அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்