தவளகிரீஸ்வரர் கோயில் கோபுர சிலை சேதம் : காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலைகோயில் கோபுரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவளகிரீஸ்வரர் கோயில் கோபுர சிலை சேதம் : காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலை கோயில் ஆயிரத்து 400-அடி உயரம் கொண்டது. இந்த கோயிலின் கோபுர மண்டபம் மற்றும் அதன் மேலே இருந்த சிலைகளை மர்ம நபர்கள் சுத்தியலால் உடைத்து சேதபடுத்தி உள்ளனர்.இது பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து பொதுமக்களும், இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் போலீசார் நேரில் சென்று கோபுரத்தை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து பொதுமக்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்