"வழக்கு தொடர வாடகை ஒப்பந்தம் தேவையில்லை" - வாடகை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாடகை ஒப்பந்தம் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு தொடர வாடகை ஒப்பந்தம் தேவையில்லை - வாடகை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
x
வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாடகை ஒப்பந்தம் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் நகலை அனைத்து வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு தலைமை பதிவாளருக்கு நீதிபதி சுரேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார். வாடகைக்கு வசிப்பவர் பல மாதங்களாக வாடகை  செலுத்தாமல் வீட்டை காலி செய்ய மறுத்தது தொடர்பாக, மணிமேகலை என்பவர் தாக்கல் செய்த மனுவில், வாடகை ஒப்பந்தம் சமர்ப்பிக்கவில்லை என கூறி கீழமை நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்