வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் : நெல்லையை சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு
x
கன்னியாகுமரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஜாய்சன். இவர் நேற்று மாலை பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணியால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்திய ஜாய்சன், அவர்களிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவரும் ஜாய்சனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பி ஓட முயன்ற அவர்களை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் பரத், ஜேசு ரக்சன் என தெரியவந்தது. இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்