விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை
x
விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. விஜயதசமி நாளன்று அரசு விடுமுறையாக இருந்தாலும், அரசு பள்ளிகளை திறந்து வைத்து குழந்தைகளை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் எல்கேஜி வகுப்பில் ஆயிரத்து 235 குழந்தைகளும், யுகேஜியில் 375 குழந்தைகளும், முதலாம் வகுப்பில் ஆயிரத்து 144 குழந்தைகளும் என  மொத்தம் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 325 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தலா ஒரு குழந்தை மட்டும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்