அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டி - 4 ஆம் இடத்தை பிடித்த தமிழக மாணவியின் கண்டுபிடிப்பு

டெல்லியில் நடைபெற்ற அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹேமா ஸ்ரீக்கு 4 ஆம் இடம் கிடைத்துள்ளது.
அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டி - 4 ஆம் இடத்தை பிடித்த தமிழக மாணவியின் கண்டுபிடிப்பு
x
டெல்லியில் நடைபெற்ற அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹேமா ஸ்ரீக்கு 4 ஆம் இடம் கிடைத்துள்ளது. குறைந்த செலவில் அதிக மகசூல் என்ற துல்லிய விவசாய தொழில்நுட்ப கருவியை அவர் காட்சிப்படுத்தியிருந்தார். இந்த கருவியின் மூலம் மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, மழை, மூடுபனி ஆகியவற்றை துல்லியமாக அளவீடு செய்து அதற்கு தக்கபடி  தண்ணீர், உரம்  ஆகியவற்றை பயிர்களுக்கு அளிக்க முடியும். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹேமா ஸ்ரீக்கு  பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்