"தமிழை ஆட்சி மொழியாக்கி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" - வைரமுத்து

தமிழை ஆட்சி மொழியாக்கி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் வைரமுத்து என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
தமிழுக்கு ஆபத்து வரும்போது, தமிழர்கள் ஒன்றுபடுவார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உணவக அரங்கில், அவரது தமிழாற்றுப்படை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரபல பின்னணி பாடகி சுசீலா, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம், கராத்தே தியாகராஜன், கவிஞர் முத்துலிங்கம், மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர். புத்தகத்தை வைரமுத்து வெளியிட, பாடகி சுசீலா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய வைரமுத்து, பிரதமர் மோடி தமிழ் பேசியதற்கு வரவேற்பு தெரிவித்தார். தமிழை மேற்கோள் காட்டுவதால் மட்டுமே அது வளராது என்றும், செயல்வடிவில் அதற்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்