எம்.எல்.ஏ-வின் தம்பி காரில் இருந்த ரூ.5 லட்சம் கொள்ளை : சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை
மதுரை சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தின் தம்பி காரில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எம்எல்ஏவின் தம்பி காரில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மதுரை சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தின் சகோதரர் முனியசாமி, தனது கட்டுமான நிறுவனத்தின் வாசலில் சொகுசு காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். இந்நிலையில், காரில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story