திருச்சி வங்கி கொள்ளையில் தொடர்பா முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் இருக்கும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி வங்கி கொள்ளையில் தொடர்பா முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
அக்டோபர் இரண்டாம் தேதி  திருச்சியில் நடைபெற்ற  நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் கனகவள்ளி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . பெங்களூருவில் சரண் அடைந்த முருகன் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு  போலீசார் காவிரி கரையில் புதைக்கப்பட்டிருந்த நான்கு கோடியே 30 லட்சம் மதிப்புடைய 12 கிலோ நகைகளை  மீட்டனர் . அந்த நகைகளை முதலில் பெங்களூரு நீதிமன்றத்திலும் பின்னர்  திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் மதுரை சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன்,கணேசன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 900 கிராம்  நகைகளை  போலீசார் மீட்டனர்.  முருகனை 17 ஆம் தேதி  திருச்சி காவல்துறையினர்  காவலில் எடுக்க உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் நடந்த திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கிற்கும் முருகனுக்கும் தொடர்பு உள்ளதா  என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்