கொடைக்கானலில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்
பதிவு : அக்டோபர் 12, 2019, 09:31 AM
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த‌தால், மனைவியை கொன்றுவிட்டு, வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையை சேர்ந்த வினோத்குமாருக்கும் மதுரையை சேர்ந்த ஜெனிபர் என்ற ஈஸ்வரிக்கும் ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. வியாழக்கிழமையன்று துணி துவைக்கும்போது தனது மனைவி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக மாமனாருக்கும் போலீசுக்கும் வினோத்குமார் தகவல் கொடுத்துள்ளார். 
சம்பவ இடத்துக்கு வந்து ஜெனிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசாருக்கு, ஜெனிபர் வழுக்கி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என சந்தேகம் அடைந்தனர். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதை அறிந்த வினோத்குமார், அங்கிருந்து நழுவி  வில்பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண‌டைந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று வினோத்குமாரை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர். அதில் அத்தை மகளான வேளாங்கண்ணியுடன் சேர்ந்து, வினோத்குமார், ஜெனிபரை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வேளாங்கண்ணியை பிடித்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். தனது கணவர் இறந்துவிட மாமன் மகனான வினோத்குமாருடன், குடும்பம் நடத்தி வந்துள்ளார் வேளாங்கண்ணி.  இந்தநிலையில் ஜெனிபரை கரம்பிடித்த வினோத்குமார், வேளாங்கண்ணியை விட்டு விலகி உள்ளார். இதையறிந்த வேளாங்கண்ணி, வீட்டிற்கு சென்று வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட, இதுதொடர்பாக கொடைக்கானல் மகளிர் காவல்நிலையத்தில் ஜெனிபர் புகார் அளித்துள்ளார். போலீசார் தலையிட்டு, வேளாங்கண்ணியை பிரித்து வைத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வேளாங்கண்ணி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஜெனிபரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.அதன்படி வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த ஜெனிபருடன் தகராறில் ஈடுபட்ட வேளாங்கண்ணி, ஒரு கட்டத்தில் அவரை தரையில் தள்ளி வாயை பொத்தி உள்ளார். அப்போது அங்கு வந்த வினோத்குமார்,  ஜெனிபரின் கை கால்களை பிடித்து கொள்ள அவரது வாய் மற்றும் மூக்கை இறுக மூடியுள்ளார் வேளாங்கண்ணி. இதில் மூச்சுத் திணறி, வாயில் ரத்தம் வந்த நிலையில் ஜெனிபர் உயிரிழந்துள்ளார். பின்னர், இந்த கொலையை மறைக்க வினோத்குமாரும், வேளாங்கண்ணியும் சேர்ந்து நாடகமாடியது தெரியவந்ததும், இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே வினோத்குமார் ஏற்கனவே கீர்த்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விவாகரத்து கொடுத்த‌தால், கீர்த்தனாவின் உயிர் தப்பியது , சேர்ந்து வாழ விரும்பியதால் ஜெனிபரின் உயிர் பறிபோயுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் அவரது உறவினர்கள்

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11374 views

ஓராண்டில் விமானப் படை பல சாதனை செய்துள்ளது-விமானப்படை புதிய தளபதி பெருமிதம்

கடந்த ஓராண்டில் இந்திய விமானப் படை அளப்பறிய சாதனைகள் படைத்துள்ளதாக புதிய தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

205 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

179 views

பிற செய்திகள்

"ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்த வழக்கை 23ஆம் தேதி விசாரிக்க கோரிக்கை" - அப்பாவு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியல் சாசன அமர்வில் அமரவிருப்பதால், வரும் 23ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக, திமுக வேட்பாளார் அப்பாவு தெரிவித்துள்ளார்.

0 views

வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மக்கள்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தை இரவோடு இரவாக மர்மநபர்கள் வெட்டிய நிலையில், அதற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

4 views

"9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

19 views

ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு - தமிழகத்தில் 33 பேர் கைது

நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

48 views

"வாக்காளர் பட்டியலில் 1.64 கோடி பேர் திருத்தம்" - சத்ய பிரதா சாஹு

வாக்களர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.