திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
x
திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில், கடந்த 2 ஆம் தேதி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.  இதனை அடுத்து,  கடந்த 3ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையின்போது, மணிகண்டன்  என்பவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையன் முருகன் மற்றும் அவரின் உறவினர் சுரேஷ்-க்கு முக்கிய பங்குள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்து வரும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில், சுரேஷ் சரணடைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்