சேலம் உயிரியல் பூங்காவில் ரூ.1 கோடியில் மேம்பாட்டு பணிகள் : ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டியில் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் மான், வெள்ளை நிற மயில், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
x
சேலம் மாவட்டம் குரும்பப்பட்டியில் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் மான், வெள்ளை நிற மயில், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பூங்கா உரிய பராமரிப்பு இன்றி காணப்பட்டு வந்த நிலையில், தற்போது வனத்துறை முயற்சி காரணமாக புதுப்பொலிவு பெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, பூங்கா வளாகத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நீரூற்று,  வண்ணத்துப்பூச்சி தோட்டம், வன உயிரினங்களின் முப்பரிமாண ஓவியங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை கவரும் விதமாக வன விலங்குகளின் உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், புதிய படைப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு, செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். மேலும், பூங்காவிற்கு செல்லும் சாலையை சீரமைக்கவும், உணவக வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்