கொடுத்த வாக்கை ரஜினிகாந்த் நிறைவேற்றிவிட்டார் - கதாசிரியர் கலைஞானம்

திரைப்பட தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு உறுதி அளித்தபடி நடிகர் ரஜினிகாந்த் வீடு வாங்கி கொடுத்துள்ளார்.
x
பிரபல கதாசிரியரும், திரைப்பட தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்ற போது, அவருக்கு சொந்த வீடு இல்லை என தெரியவந்தது. இதை அறிந்த ரஜினி, அவருக்கு வீடு வாங்கி தருவதாக அந்த விழா மேடையில் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் தற்போது, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 3 படுக்கை அறை வசதி கொண்ட ஒரு வீட்டை கலைஞானத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து,  கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றியுள்ளார் என கலைஞானம் உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்