பயோமெட்ரிக் வருகை பதிவேடு செய்யாவிட்டால் நடவடிக்கை" : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயோமெட்ரிக் வருகைப் பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயோமெட்ரிக் வருகை பதிவேடு செய்யாவிட்டால் நடவடிக்கை : பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
x
அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில்,  பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயோமெட்ரிக் வருகைப்பதிவினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. 

மேலும், வருகைப்பதிவை தாமதமாகவோ அல்லது மேற்கொள்ளாமலோ இருந்தால் அரசு விதிகளின்படி, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகைப்பதிவு மேற்கொண்ட பிறகு உரிய காரணம் இன்றி பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் மதிய உணவிற்கு பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்