தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வாங்கியவர் : சோதனையில் போலி என தெரியவந்ததால், புகார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், போலி தங்க கட்டிகள் கொடுத்து 3 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டது.
தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வாங்கியவர் : சோதனையில் போலி என தெரியவந்ததால், புகார்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், போலி தங்க கட்டிகள் கொடுத்து 3 சவரன் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டது. திருவனந்தபுரம் தைக்காடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர், உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். வடசேரி பேருந்து ஏறிய அவரை அணுகிய மர்மநபர்கள் 3 பேர், தங்க கட்டிகளை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, தன்னிடம் பணம் இல்லை என கூறிய அவரிடம், தங்கச் சங்கிலிக்கு மாற்றாக தங்கக் கட்டி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் சோதித்த போது, அது போலி என தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்