கள்ளக் காதலியின் மகனை கீழே தள்ளிய கொடூரம் : கைதான காதலன், ஒப்புதல் வாக்குமூலம்

பொள்ளாச்சி அருகே குழந்தையை கீழே தள்ளி கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக் காதலியின் மகனை கீழே தள்ளிய கொடூரம் : கைதான காதலன், ஒப்புதல் வாக்குமூலம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாயைச் சேர்ந்த குமரவேல், பேச்சியம்மாள் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமது 3 வயது மகன் மதியழகனுடன் தலைமறைவான பேச்சியம்மாளும், அவரின் மாமா மகன் பிரகாஷும் பொள்ளாச்சி அடுத்த நல்லூரில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளனர். அங்கு, குழந்தை மதியழகன், கீழே விழுந்து மயங்கிவிட்டதாக கூறி அரசு மருத்தவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பி ஓடிய பிரகாஷை பிடித்த போலீசார், அழுதுகொண்டே இருந்த சிறுவனை கீழே தள்ளி விட்டதாகவும், அப்போது அவன் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்