"தேசப்பற்றுடன் கடுமையாக உழைத்தால் ஆளுநராக அமரலாம்" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை

சென்னை ரெட்டேரியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, தேசப்பற்றுடன் கடுமையாக உழைத்தால் ஆளுநராகலாம் என்று அறிவுரை கூறினார்.
தேசப்பற்றுடன் கடுமையாக உழைத்தால் ஆளுநராக அமரலாம் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அறிவுரை
x
சென்னை ரெட்டேரியில் தனியார் அறக்கட்டளை சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார். அவருடன் நடிகை வரலட்சுமி, திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, தமிழிசையின் கணவர் சௌந்தர் ராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, அனைவரும் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேசப்பற்றுடன் கடுமையாக உழைத்தால் ஆளுநராகலாம் என்றும் கூறினார். தொடர்ந்து சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பால் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்