காரைக்குடியில் ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை

காரைக்குடியில் ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி வீட்டில்170 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை
x
காரைக்குடி காதி நகரில் வசித்து வருகிறார், ஓய்வுபெற்ற  தபால் துறை அதிகாரி ஜெயராஜ். இவரின் 3 மகன்களும் வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள தனது மருமகளை பார்க்க, மனைவியுடன் சென்று விட்டு 10 நாட்கள் கழித்து ஜெயராஜ் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் வைத்திருந்த 170 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், கொள்ளையர்கள், காலில் எண்ணெய் தடவி கொண்டு வந்திருக்கலாம் என  தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்