கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு, 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.
கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்
x
ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது. கமுதி  முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடுகின்றனர். இந்த திருவிழா நடக்கும் ஒரு வார காலத்திற்கு  இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை. விழாவின் போது செம்மறி கிடாய்கள் 50 பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்