அரசு பொது மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல் வார்டு பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும்  அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும்  பேனர் அனுமதிக்காக அவசரம் அவசரமாக நீதிமன்றத்தை நாடிய அரசு, நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நீதிமன்றம் செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பனார். 

Next Story

மேலும் செய்திகள்