தேசிய பிரச்சினைகளை தோலுரித்த மணிரத்னம் படங்கள்

இயக்குநர் மணிரத்னம் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய பிரச்சினைகள் குறித்து பேசிய அவரது படங்கள் குறித்து ஒரு பார்வை...
தேசிய பிரச்சினைகளை தோலுரித்த மணிரத்னம் படங்கள்
x
இயக்குநர் மணிரத்னம், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து திரைப்படமாக தோலுரித்து காட்டியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை மையப்படுத்திய ரோஜா படம் அவரது ஆரம்பக் கல். 
           
பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்தப் படத்துக்கு பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளின் மீது, காதலை மையப்படுத்தி உயிரே படம் மூலம் வெளிச்சம் பாய்ச்சியனார் மணிரத்னம்.  
            
ரத்தமும் சதையுமாக தமிழகத்தோடு தொடர்புடைய ஈழத் தமிழர்களும், அவர்களது பிரச்சினை குறித்தும் பேசியது மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் .
        
இவற்றில், மதத்தின் பெயரால் நடைபெறும் கலவரமும், சாமானியர்களை பாதிக்கும் விவகாரமும் குறித்து பாம்பே படம் மூலம் பேசியவர் மணிரத்னம்.
               
இப்படி சர்ச்சையான விஷயங்களை ஒருபடி மேலே போய் தொட்ட மணிரத்னத்தின் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்