காஞ்சிபுரம் : ரூ.2 கோடி மோசடி - தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு

காஞ்சிபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் : ரூ.2 கோடி மோசடி - தீபாவளி சீட்டு நடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
காஞ்சிபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கவதி நகரில் வசிக்கும் ராஜேஷ்குமார், கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சீட்டு செப்டம்பர் மாதமே முடிவடைந்த நிலையில், ராஜேஷ்குமார் வாடிக்கையாளர்களிடம் சரிவர பதிலளிக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வரும் வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்