முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் 6 பேர் மீது வழக்கு - புதுக்கோட்டை மகளிர் காவல்துறை நடவடிக்கை

புதுக்கோட்டையில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் 6 பேர் மீது வழக்கு - புதுக்கோட்டை மகளிர் காவல்துறை நடவடிக்கை
x
திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த எம்.ஷேக்அப்துல்லா. இவரது மனைவி ரிஸ்வானா பேகம். இவர்களுக்கு கடந்த 2017-ல் திருமணமாகி, 2 வயதில் மகள் உள்ளார். இந்த தம்பதி இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ரிஸ்வானாவுடன் சேர்ந்து வாழ முடியாதென, கடந்த இரு தினங்களுக்கு முன், ஷேக்அப்துல்லா மூன்று முறை தலாக் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஷேக்அப்துல்லா உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் மீது முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்