திணை, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பாரம்பரிய உணவு கண்காட்சி - சமையல் கலை மாணவர்களின் அசத்தல் ஏற்பாடு
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். அந்தக் கல்லூரியில் உள்ள உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறையினர் நடத்திய இந்தக் கண்காட்சியில், சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுகள் காட்சிப் படுத்தப்பட்டன. திணைஅடை, ராகி புட்டு, சோள கபாப், எள்ளு வடை, கீரை மற்றும் காய்கறிகள் சூப், கம்பு கட்லெட், அரிசி அலாபுட்டு, திணை தோசை, சாமை சோறு, குதிரைவாளி பிரியாணி, காய்கறி, கீரைகள் கொண்ட சமோசா உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் இருந்தது. அவற்றை பார்த்தும், ருசித்தும் மகிழ்ந்த பார்வையாளர்கள், செய்முறைகளையும் கேட்டு தெரிந்துகொண்டனர்.
Next Story