ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் முயற்சியை திமுக எதிர்க்கிறது - தயாநிதிமாறன்

திமுக எம்.பி. தயாநிதிமாறன் சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசை சந்தித்தார்.
x
திமுக எம்.பி. தயாநிதிமாறன், சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசை,  சந்தித்தார். அப்போது, ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் தொடர்பாக, அவர் கோரிக்கை மனு அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படும் முயற்சியை திமுக எதிர்ப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடியை சந்தித்து, வலியுறுத்த இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்