தாயிடம் இருந்து பிரிந்த 3 மாத பெண் குட்டி யானை மீட்பு
சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரகத்தில் தாயிடம் இருந்து பிரிந்து வந்து, வனப்பகுதியில் தவித்து கொண்டிருந்த 3 மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரகத்தில் தாயிடம் இருந்து பிரிந்து வந்து, வனப்பகுதியில் தவித்து கொண்டிருந்த 3 மாதமே ஆன பெண் குட்டி யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில், நேற்று இரவு குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், காப்பகத்தில் உள்ள கால்நடை மையத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் குட்டி யானை காப்பகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story