தேனியில் தொழிலதிபர் வீட்டில் 280 சவரன், ரூ. 2 லட்சம் கொள்ளை

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 280 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனியில் தொழிலதிபர் வீட்டில் 280 சவரன், ரூ. 2 லட்சம் கொள்ளை
x
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த தொழிலதிபரான கோகுலகிருஷ்ணன் இரண்டு நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கோகுல கிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் ஊர்திரும்பிய கோகுலகிருஷ்ணன் நகை - பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணருடன் வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பீரோவில் இருந்த 280 சவரன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ஆகியவற்றை மர்மநபர்கள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பூட்டை உடைத்து இந்தக் கொள்ளை நடைபெற்றுள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்