போரூர் ஏரி கரையில் மரக்கன்றுகள் நடும்விழா - ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை போரூர் ஏரியில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போரூர் ஏரி கரையில் மரக்கன்றுகள் நடும்விழா - ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு
x
காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை போரூர் ஏரியில்  தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக,  புதர் மண்டி காணப்பட்ட போரூர் ஏரியை, கடந்த ஜூலை மாதம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏரியில் இருந்த குப்பைகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்று ஏரியின் கரையில்  ஆயிரத்து 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்