நீட் இல்லாதபோது, எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
நீட் தேர்வு கெடுபிடிகளை, மேலும், கடுமையாக்க வேண்டும் என முன்னாள் மத்திய  அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவில்-வடசேரி பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மாணவர்கள், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், செல்வாக்கு படைத்த குடும்பங்களை சேர்ந்தவர்களே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு வைத்த பிறகு மோசடிகள் வெளிவருவதாக கூறிய அவர், நீட் தேர்வு இல்லாத காலத்தில் எவ்வளவு மோசடிகள் நடத்திருக்கும் என்றார். இந்த அனுபவங்களை கொண்டு, நீட் தேர்வு நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்