செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.91,916 கோடி

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.91,916 கோடி
x
சரக்கு மற்றும் சேவை வரி மூலம் செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம்  கூறியுள்ளது.  இதில், மாநில அரசின் பங்காக 16 ஆயிரத்து 630 கோடி ரூபாயும், மத்திய அரசின் பங்காக 22 ஆயிரத்து 598 கோடி ரூபாயும் வரி வருவாய் கிடைத்துள்ளது.  இறக்குமதி வரி 22 ஆயிரம் கோடி ரூபாய் உள்பட ஒருங்கிணைந்த வரி  45 ஆயிரத்து 69 கோடி ரூபாயும் அரசுக்கு கிடைத்துள்ளது. கூடுதல் வரியாக 7 ஆயிரத்து 620 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2019 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் வரி வருவாயாக 37 ஆயிரத்து 761 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், மாநில அரசுக்கு  37  ஆயிரத்து 719 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்