உலகின் தொன்மையான மொழியான தமிழின் தாயகம் - பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் தொன்மையான மொழியான தமிழுக்கும், நவீன மொழியான சென்னை ஐ.ஐ.டி.க்கும் தாயகம் தமிழ்நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவின் எதிர்க்காலம் இங்குள்ள மாணவர்களின் கண்களில் தெரிவதாகவும், உங்களை இங்கு கொணர்ந்த பெற்றோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்களை கேட்டுக் கொண்டார். உலக அளவில் பிராண்ட் இந்தியாவை உருவாக்குவதில் முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்களின் பங்களிப்பை வெகுவாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
Next Story