தமிழிசை பாராட்டு விழாவில் பங்கேற்காத அ.தி.மு.க.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக பங்கற்காதது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழிசை பாராட்டு விழாவில் பங்கேற்காத அ.தி.மு.க.
x
சென்னையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய தெலங்கானா மாநில ஆளுநருமான  தமிழிசை சவுந்தரராஜனுக்கு  பாராட்டு விழா  நடத்தப்பட்டது . பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா மாநில தலைவர் ஞான தேசிகன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் ஆகியோர்  பங்கேற்று தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால்  பாஜகவின் பிரதான கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் இந்த நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ள வில்லை.  பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொள்வார்கள் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் விழாவில் பங்கேற்காதது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக பகிரங்கமாக பாஜகவின் ஆதரவை கோர வில்லை, பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. தற்போது நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவை பாஜக ஆதரிக்க போகிறதா, இல்லையா என்பது குறித்து  தெளிவு படுத்தப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்