வீரத்தம்பதிகளிடம் நகை பறித்த கொள்ளையர்கள்-50 நாட்களாகியும் கொள்ளையர்கள் சிக்கவில்லை

நெல்லை மாவட்டம் கடையத்தில் வீர‌த்தம்பதிகளிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களை பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது
வீரத்தம்பதிகளிடம் நகை பறித்த கொள்ளையர்கள்-50 நாட்களாகியும் கொள்ளையர்கள் சிக்கவில்லை
x
நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த கல்யாணி புரத்தில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினரிடம் இருந்து 35 கிராம் நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அவர்களை தம்பதியினர் விரட்டி அடித்த நிகழ்வை அறிந்த அரசு  அவர்களுக்கு விருது வழங்கியது. அனைத்து துறையினரும் பாராட்டினார்கள். இந்த சம்பவம் நடந்து 50 நாட்களாகியும் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் கொள்ளையர்கள் குறித்தும் கொள்ளைக்கான காரணம் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை தனிப்படை போலீசார்  பல முறை  ஆலோசணை நடத்தியும் விசாரணையை பல்வேறு கோணங்களில் விரிவு படுத்தியும், மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன‌ளிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்கள் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தும்  குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்காத‌து, போலீசாருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் பட்டியலில் இந்த வழக்கும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் நெல்லை மாவட்ட மக்களிடம் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்