தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் தலைமையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டையில் நடந்தது.  இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காய்ச்சல் என்றால் மக்கள் அலட்சியம் காட்டாமல், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய ரத்த பரிசோதனையை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்