தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நித்தியானந்தா? : தொடர்ந்து வெளியாகும் நித்தியானந்தா வீடியோ

சர்ச்சைக்கு பெயர் போன நித்தியானந்தா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நித்தியானந்தா? : தொடர்ந்து வெளியாகும் நித்தியானந்தா வீடியோ
x
நித்தியானந்தாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ள நிலையில், அவரை சுற்றியுள்ள சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. நித்தியானந்தா தன் பக்தர்களுக்கு சொற் பொழிவு நடத்துவது போல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளிவரும் அந்த வீடியோக்களுக்கு என தனி ரசிகர்களும் உண்டு. நித்தியானந்தா அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், மேட்டூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் மூலவர் லிங்கம் தம்மிடம் இருப்பதாக கூறி, சர்ச்சையில்சிக்கினார். இந்த கோயிலை கடந்த ஜென்மத்தில் கட்டியது தாம் தான் என்று கூறியது கூடுதல் நகைச்சுவை. நித்தியானந்தாவின் இந்த பேச்சை அடுத்து, அவர் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்து அறிநிலையத்துறை அதிகாரிகள் கோயிலில் சென்று சோதனை நடத்திய போது மூலவர் சிலை, அங்கேயே இருந்தது தெரியவந்தது. 

இந்த நிலையில் ஆர்த்தி ராவ் என்ற பெண் நித்தியானந்தா மீது அளித்த பாலியல் தொந்தரவு புகாரின் பேரில் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது வழக்கு விசாரணை ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார் நித்யானந்தா. 

ஆனால் இணையத்தளத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தெறிக்க தன்னுடைய பக்தர்களுக்கு நித்தியானந்தா அருள் பாலிக்கும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும் சில வீடியோக்கள் தமிழிலும், சில வீடியோக்கள் ஆங்கிலத்திலும் நித்தியானந்தா பேசுவது போல் அமைந்துள்ளது. இதனால் நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருப்பதாக சிலரும் வெளிநாட்டில் இருப்பதாக சிலரும் கூறி வருகிறார்கள். பெங்களூரு ஆசிரமத்திலும் நித்தியானந்தா இல்லாததால், அவர் தலைமறைவாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்