என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி வீட்டில் திடீர் சோதனை : வீட்டில் இருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள் என்ன?

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி மணிகண்டன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையும், மீட்கப்பட்ட மர்ம பொருட்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி வீட்டில் திடீர் சோதனை : வீட்டில் இருந்து மீட்கப்பட்ட மர்ம பொருள் என்ன?
x
விழுப்புரம் மாவட்டம் குயிலப்பாக்கத்தை சேர்ந்த தாதா மணிகண்டன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் மாஜிஸ்திரேட் தனஞ்செயன் தலைமையிலான குழு, மணிகண்டன் உடலை பார்வையிட்டு, அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பை சோதனையிட்ட இந்த குழு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அனைத்தும் எழுத்துபூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் தனஞ்செயன் அங்கிருந்து கிளம்பியதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டனர்.  நீண்ட நேர சோதனைக்கு பின், போலீசார் அட்டை பெட்டிகளில் சில பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளனர். அந்த பொருள் குறித்து போலீசார் எதுவும் தெரிவிக்காத நிலையில், மணிகண்டன் வெடிகுண்டு செய்வதில் கை தேர்ந்தவர் என்பதால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்