"அதிமுகவுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" - விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி வேண்டுகோள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில், நா.புகழேந்தி போட்டியிடுகிறார்.
அதிமுகவுக்கு பாடம் புகட்ட திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி வேண்டுகோள்
x
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில், நா.புகழேந்தி போட்டியிடுகிறார். இதனை, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார். சென்னையில் விக்கிரவாண்டி திரும்பிய அவருக்கு, திமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் வடக்கு பைபாஸ் முனையில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட, தமக்கு பெருவாரியான வாக்குகளை மக்கள் அளிக்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்