துணை முதல்வர் பெயரை பயன்படுத்தி மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

துணை முதலமைச்சர் பெயரை பயன்படுத்தி, தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் பெயரை பயன்படுத்தி மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி
x
திருவண்ணாமலையை பொறியியல் பட்டதாரி சரவணன். இவரிடம், செந்தில் ராஜ் என்பவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாக கூறி, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சரவணன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பெயரை பயன்படுத்தி செந்தில்ராஜ் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை போன்று பல பொறியியல் பட்டதாரிகளைகளையும் செந்தில்ராஜ் குறி வைத்துள்ளார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். செந்தில் ராஜ் அம்மா இருசக்கர வாகன திட்டம் மூலமும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்