அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

அரசு அறிவித்த பால் கட்டண உயர்வு தங்களுக்கு வழங்கபடவில்லை என்று திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
x

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பாலுக்கு  லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாயும் எருமைப்பாலுக்கு 6 ரூபாயும் உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வெறும் 2 ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கப்படுவதாகவும் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக புகார் மனு கொடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்