இரண்டு தொகுதி இடைத்தேர்தல் -இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் -இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்
x
தமிழகத்தில் இ​டைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. மனு தாக்கலுக்கு 30ம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அதிமுகவுக்கு பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா., தே.மு.தி.க. கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுபோல, திமுக, காங்கிரசுக்கு அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக,  விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் மற்றும் தினகரனின் அமமுக கட்சிகள், வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்