ஓராண்டில் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் அடுத்த ஓராண்டில் மத்திய அரசு நிதி உதவியுடன் 825 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்  தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  சேலம் கோட்ட தலைமை அலுவலகத்தில்  ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் வழங்கும் விழா   நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக போக்குவரத்துறை வரலாற்றில்  சிறப்புமிக்க நிகழ்வாக ஒரே தவணையில் ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசின் சார்பில் போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்