அதிமுக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம் - திங்கள் கிழமை நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்முகத் தேர்வு, திங்கட் கிழமை நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம் - திங்கள் கிழமை நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு
x
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் 23ஆம் தேதி 3 மணி வரை பெறப்படும் என​ அதிமுக ஒருங்கிணைப்பாளர்  பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 23ம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என மற்றொரு அறிவிப்புல் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  அன்றைய தினமே இரண்டு தொகுதி அதிமுக வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்