சென்னையில் ஒரு கிராமமே திரண்டு திருட்டு வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சி...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு கிராமமே திரண்டு திருட்டு வேட்டையில் ஈடுபட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரு கிராமமே திரண்டு திருட்டு வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சி...
x
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான நிறுவனங்களில், லட்சக் கணக்கான பட்டதாரி இளைஞர்கள் பணியாற்றுகின்றனர். கிடைத்த வேலையில், சொற்ப சம்பளத்தில் கூட்டாக சேர்ந்து தங்கியுள்ள இளைஞர்களின் வீடுகளை குறிவைத்து, புற்றீசல் போல், ஒரு கிராமமே திருடுவதற்கு படையெடுத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உழைப்போரின் அதிகாலை நேரத்து ஆழ்ந்த தூக்கத்தை பயன்படுத்தி, பேச்சுலர் வீடுகளில் நுழையும் கும்பல், மடி கணினி, செல்போன், பணம், நகை என கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றுள்ளது. தாம்பரம் அருகே இரும்புலியூரில் தங்கியிருந்த இளைஞர் தமது வீட்டில் நடந்த திருட்டு குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதே போன்ற புகார்கள் அதிகரித்து வந்த நிலையில், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். ஒருமாத தீவிர தேடுதல் வேட்டையில், ஐஎம்இ எண் மூலம் திருட்டு செல்போனை வாங்கிய நபர் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்படி, கிண்டியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கியிருந்த சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் அளித்த தகவல் போலீசாரையே அதிரச் செய்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருந்து, வேலைக்கு கிளம்புவது போல், சென்னைக்கு கிளம்பிவரும் ஒரு சமூகத்தினர், பேச்சுலர் அறைகளை குறிவைப்பார்களாம். தொடர் கண்காணிப்புக்கு பிறகு, அதிகாலை நேரத்தில், குறிவைத்த வீடுகளில் கிடைத்ததை சுருட்டி, நபர் ஒருவர் மூலம், தங்கள் ஊருக்கு அனுப்பி விடுவார்களாம். வடமாநில குற்றம் பரம்பரை போல, திருட்டில் ஈடுபடும் அந்தக் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆமாம். ஊரு எதுன்ன கேட்கலையே... வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த நய்யம்பட்டி.

Next Story

மேலும் செய்திகள்