தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு : மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்பதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு : மத்திய சட்ட அமைச்சகம் தகவல்
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்பதாக, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சக இணை செயலாளர் சதானந்த் வசந்த் டாட்டே வெளியிட்டுள்ள தகவலில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டதை ஏற்காமல், தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்