"திரைப்பட பாணியில் நூதன மோசடி : நான்கு இளைஞர்கள் கைது "

வேலை தருவதாக துண்டு பிரசுரம் மூலம் வலைவிரித்த நிறுவனம் ஒன்று, பட்டதாரி மாணவர்களை அடித்து உ​தைத்து பணம் வசூல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
x
நிரந்தர மற்றும் பகுதி நேர வேலை, வீட்டில் இருந்தபடியே வேலை என பேருந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் ஒட்டி அழைப்பு விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது...

இதுபோன்ற ஒரு விளம்பரத்தின் தொலைபேசி எண் மூலம், சென்னை கோயம்பேடு அருகே எம்.எம்.டி.ஏ. வில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில், இளம் பட்டதாரிகள் பலர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். 

அவர்களில் சிலரிடம், 7 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. 

பலருக்கு பணிகள் ஏதும் வழ​ங்காமல் இருந்ததால், சந்தேகம் எழுந்த நிலையில், நிர்வாக தரப்பில், கேட்டுள்ளனர். ஆனால், உரிய விளக்கம் அளிக்காத நிர்வாகம், இளம்பெண் ஒருவரை அடித்து உதைத்ததில், அவர் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்