திருவாவடுதுறை மடத்தில் தொடரும் சர்ச்சை - ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் துறவிகள்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான், விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாவடுதுறை மடத்தில் தொடரும் சர்ச்சை - ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் துறவிகள்
x
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான், விதிகளை மீறியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம் அளித்துள்ளார்.  உடல்நிலை சரியில்லாததால் சுவாமிநாத தம்பிரான் ராஜினாமா செய்த‌தாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த காவி உடை, உத்திராட்சம் உள்ளிட்டவை பறிக்கப்பட்டன. இந்த நிலையில், காசிக்கு சென்ற அவர் மீண்டும் காவி உடை அணிந்தபடி, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்த‌தாக வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர், சுவாமிநாத தம்பிரான் முழுமையாக துறவறம் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்