திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு
திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவரது குடும்பத்தினரால் பதிவிடப்பட்டுள்ள பதிவில் தமிழர்கள் மற்றும் ஹிந்தி பேசாத எந்தவொரு மாநிலத்தவரும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளதாக தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ள சிதம்பரம் இதற்கு எதிராக தமிழர்கள் போராட தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story