2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு

புதுக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, இளம்பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை - குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு
x
இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்த ராஜலெட்சுமிக்கும், மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், வேலையின்றி வீட்டில் இருந்த மணிகண்டன், தொழில் தொடங்குவதற்காக, தமது தாய் கஸ்தூரியிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டிற்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த ராஜலெட்சுமி, மூன்றரை வயது மகள் நந்தினி மற்றும் 11 மாத குழந்தை தாரணிஸ்ரீ ஆகிய இருவரது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு தானும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் 3 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்