"திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது" - உதயநிதி ஸ்டாலின்

பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
பேனர் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் வைப்பவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார். தொடரும் மின்விபத்து மரணங்கள், மக்களுக்கு பாதுகாப்பற்ற அரசு என்பதை காட்டுவதாக, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்